தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், ரேஷன் கடைகள், காலை, 8 முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
தளர்வில்லா ஊரடங்கு (Relaxed curfew)
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் முதல், 31ம் தேதி வரை, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் ரேஷன் கடைகள் செயல்படாது என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட நுகர்வோர் (Affected consumers)
இதன் காரணமாக, இந்த மாதம் உணவுப்பொருட்கள் வாங்காதவர்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. மேலும், கொரோனா நிவாரண தொகையையும், ஏராளமானோர் வாங்காமல் உள்ளனர். அவர்களுக்காக ரேஷன் கடைகளை, குறிப்பிட்ட நேரம் திறக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு அறிவிப்பு (Government Announced)
இந்தக் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்தத் தமிழக அரசு , சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
புதியத் தளர்வுகள் (New relaxations)
ரேஷன் கடைகள் இயங்கும் (Running ration shops)
இதன்படி, இன்று முதல் பொது வினியோக திட்டத்தில் இயங்கும் ரேஷன் கடைகள், காலை, 8 முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்கும்.
நிறுவனங்களுக்குத் தளர்வு
வங்கி (Bank)
ஏற்கனவே, ஏ.டி.எம்., தொடர்பான வங்கி சேவை அனுமதிக்கப்பட்டு உள்ளது. வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம்.
இன்சூரன்ஸ் (Insurance)
தற்போது, இன்சூரன்ஸ் நிறுவனங்களும், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும் (Use regularly)
எனவே உணவுப் பொருட்களை வாங்கத் தவறியப் பொதுமக்களும், கொரோனா நிவாரண நிதியுதவியைப் பெறத் தவறியவர்களும் இன்று முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு ரேஷன் அட்டை தாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க...
இனி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்: தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி!!