நாமக்கல் மாவட்டத்தில் 3% மஞ்சள் பாஸ்பரஸ் (எலி மருந்து - Ratol paste) அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி மருந்து விற்றால், வட்டார அளவிலான பூச்சி மருந்து ஆய்வாளரிடம் தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த ‘ரேடால்' என்ற எலி மருந்தானது மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த ஒரு காரணத்திற்காகவும் வாங்க வேண்டாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ‘ரேடால்' மருந்து விற்க கூடிய விற்பனையாளர்களை கண்டறிய சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில் ‘ரேடால்' மருந்து விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள ஆட்சியர், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள 'ரேடால்' நாமக்கல் மாவட்டத்தில் விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள், விவசாயிகள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளரிடம் கீழ்காணும் கைபேசி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
வட்டாரம்- அலுவலர்- தொடர்பு எண் விவரம் பின்வருமாறு-
- நாமக்கல்- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர் - கைபேசி எண் : 9865058475
- புதுச்சத்திரம்- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்- 9486574608
- சேந்தமங்கலம்- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்- 9786347154
- எருமப்பட்டி- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்- 9842012733
- மோகனூர்- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்- 9952747307
- கொல்லிமலை- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்- 9786459214
- இராசிபுரம்- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்- 9786459214
- வெண்ணந்தூர்- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்- 9042007854
- நாமகிரிபேட்டை- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்-9789125574
- திருச்செங்கோடு- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்-9942856899
- பள்ளிபாளையம்- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர் - 9788540255
- எலச்சிபாளையம்- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்- 7904411477
- மல்லசமுத்திரம்- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்- 8668141023
- பரமத்தி- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்- 9360040135
- கபிலர்மலை- பூச்சி மருந்து ஆய்வாளர் / வேளாண்மை அலுவலர்- 9488036930
புகாரின் தன்மை உறுதி செய்யப்படும் பட்சத்தில் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., எச்சரித்துள்ளார்.
மேலும் காண்க: