ரியல்மி GT நியோ 3T ஸமார்போனினை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்து இருந்தது. அறிமுகம் செய்யப்படும் போதே, இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் செப்டம்பர் 16 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.
புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் ரியல்மி தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கி உள்ளது. இதில் ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படுவதும், பின்புறத்தில் ரேசிங் கொடி இடம்பெற்று இருக்கும் என தெரியவருகிறது.
ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 5ஜி கனேக்டிவிட்டி கொண்டிருக்கும் என்றும் ரியல்மி வெளியிட்டு இருக்கும் டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் படிபடியாக அறிவிக்கப்படும் என ரியல்மி தெரிவித்து உள்ளது குறிப்பிடதக்கது. மேலும் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் ரிப்ரேஷ் ரேட் பற்றிய விவரங்கள் வெளியாகும் என ரியல்மி தெரிவித்துள்ளது.
ரியல்மி GT நியோ 3T சர்வதேச வேரியண்ட் அம்சங்கள்:
ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் E4 AMOLED டிஸ்பளே, 120Hz ரிப்ரேஷ் ரேட், HDR 10+சப்போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அட்ரினோ 650 GPU மற்றும் 8GB RAM வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64MP Primary சென்சாருடன் மூன்று கேமரா சென்சார்கள், 8MP Ultra Wide ஆங்கில் லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ், 16 MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 MAH பேட்டரி, 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க:
தங்கு தடையின்றி ஆவின் பால் விநியோகம்: 24 மணி நேரமும் தகவல் ஏற்கப்படும்