மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 May, 2022 11:47 AM IST
Realme Narzo 50-5G: Introductory Price Rs. 13,999! Details inside!

Realme நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களாக Narzo 50A மற்றும் Narzo 50i ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளன. இத்துடன் Realme Band 2 மற்றும் Smart TV Neo 32-inch மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. இந்நிலையில், தற்போது புது தொழில்நுட்பங்களுடன், சம்மர் டிரிட்டாக, 24 மே, 2022 அன்று வெளியாக உள்ளது, Realme-இன் Narzo 50-5G. விலை மற்றும் இதன் அம்சங்களை பதிவில் காணலாம்.

Realme Narzo 50-5G மாடல் தான் - அதிக பிரீமியம் மாடல் ஆகும். இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் மீடியா டெக் டைமின்சிட்டி 810 5G மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் இரண்டு பின்புற கேமரா அமைப்பை கொண்டு உள்ளது.

நாளை 24 மே, 2022 அதாவது நள்ளிரவு முதல், இதன் விற்பனை அமேசானில் தொடங்கும்.

இந்தியாவில் Realme Narzo 50-5G விற்பனை:

ரியல்மி நர்சோ 50-5G - 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் கொண்டுள்ளது, இதன் அறிமுக விற்பனை விலை - ரூ.16,999 ஆகும். ஆனால் வங்கி சலுகைகளுடன் வாங்கினால் விலை, மேலும் குறையும் என்பது குறிப்பிடதக்கது.

இது ஹைப்பர் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்- ரியல்மி நார்சோ 50-5G மே 24 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் Realme.com, அமேசான் மற்றும் பிற முக்கிய சில்லறை சேனல்கள் வழியாக வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க: TNPSC: கேள்விகள் தவறாக இருந்ததாக குற்றச்சாட்டு, தேர்வாணையம் விளக்கம்

Realme Narzo 50-5G அம்சங்கள்(Features):

- ரியல்மி நார்ஸோ 50-5G - மைட்டி 5G என்றும் அழைக்கப்படும்.
- 90 Hz ஹல்டிரா ஸ்மூத் டிஸ்ப்ளே
- 5000 mAh பேட்டரி கொண்டதாகும்.
- 1mm ஸ்லிம் மற்றும் 190 கிராம் லைட் எடை கொண்டதாகும்.
- மேம்பட்ட 6nm செயல்முறையுடன், Dimensity 810 5g செயலி சிறந்த செயல்திறன் மற்றும் குறைந்த ஆற்றல் நுகர்வை வழங்குகிறது, எனவே நீங்கள் ஸ்மூத்தான 5G அனுபவத்தை அனுபவிக்க உதவும்.
- டிஸ்ப்ளே அளவு 6.6''(16.7cm), FHD+ டிஸ்ப்ளே, 90.7% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் 90Hz வரையிலான புதுப்பிப்பு வீதத்துடன், தெளிவான படத் தரம் மற்றும் லேக் இல்லாமல் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே கிடைக்கும்.
- ஹை-ரெஸ்ஸுக்கு, இரட்டை ஸ்பீக்கர்கள் மூலம் சிறந்த ஒலியை மற்றும் மேம்பட்ட ஒலி தரத்தை அனுபவிக்க, இது பயனுள்ளதாக இருக்கும்.
- 33W டார்ட் சார்ஜின் சிறந்த சார்ஜிங் வேகத்தை அனுபவிக்கலாம், இது ஐந்து-கோர் சிப் பாதுகாப்பு அமைப்பால் உருவாக்கப்பட்டது.
இது விரைவான மற்றும் பாதுகாப்பான சார்ஜிங்கை வழங்குகிறது.

மேலும் படிக்க: கிசான் ரத் செயலி: விளைப்பொருட்களை கொண்டு செல்ல உதவும்

EMI விவரம் (EMI Details):

NO cost EMI- இந்த ஸ்மார்ட் போனுக்கு வழங்கப்படுகிறது. மேலும் 800 ரூபாயில் இருந்து EMI- இல் இந்த ஸமார்ட் போனை பெற்றிடலாம்.

வங்கி சலுகை (Bank offer):

ரூ.18,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் வங்கி மூலம் பணம் செலுத்தும் பட்சத்தில் ரூ. 16,999க்கு வாங்கிடலாம்.

Lowest First Day Sale (முதல் நாள் விற்பனை சலுகை):

HDFC வங்கி சலுகைகளுடன் முதல் நாள் விற்பனையை முன்னிட்டு 24 மே 2022 அன்று ரூ.13,999 க்கு வாங்கிடலாம். பட்ஜெட்டில் சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன் முந்துங்கள்.

மேலும் படிக்க:

தேனீ வளர்ப்பைப் பெருக்கும் பணியில் நிபுணர்கள்!

தென்மேற்கு பருவமழை 23ந்தேதியே தொடங்கும்: வானிலை நிலவரம்

English Summary: Realme Narzo 50-5G: Introductory Price Rs. 13,999! Details inside!
Published on: 23 May 2022, 11:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now