பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 September, 2021 7:25 AM IST
28 Lakh Vaccination

தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக, ஒரே நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் நடந்தது. இரவு 8:30 மணி நிலவரப்படி 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைத்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3.79 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம் (Vaccination Drive) நடைபெறுகிறது.

தடுப்பூசி மையங்கள்

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என, 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த மையங்களில், 19 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக தேவையான தடுப்பூசிகளை, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் வாயிலாக, மூன்றாவது அலை தொற்றை தவிர்க்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தடுப்பூசி முகாம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

Also Read | வைரஸ் தொற்றால் நினைவாற்றல் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?

வழிகாட்டு நெறிமுறை

  • கொரோனா தடுப்பூசி மையங்கள் காலை 7:00 முதல், இரவு 8:30 மணி வரை செயல்படும். ஒவ்வொரு மையத்திலும், போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
  • தடுப்பூசி செலுத்திய பின், ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் சிகிச்சை கருவிகள்தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
  • சிறப்பு முகாம்கள் பாதுகாப்பான முறையில் நடைபெற, கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.
  • சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கை கழுவுதல் கட்டாயமாகும்.
  • தடுப்பூசி போடும் முன், சோப்பை கொண்டு கைகழுவுவது அல்லது கிருமி நாசினி உபயோகப்படுத்துவது கட்டாயம்.
  • பெரியவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால், மையங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது. மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பெறுபவர்களுடன் ஒரு நபர்மட்டுமே அனுமதிக்கப்படுவார்.
  • பயனாளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களை எடுத்து வர வேண்டும். நோய் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களை ஒட்டிய பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.
  • இப்பணியில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுவர். அனைத்து மையங்களிலும், போதுமான காவல் துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்படும்.
  • மூன்றாவது அலையை தவிர்ப்பதற்காக, கொரோனா நோயில் இருந்து விடுபடவும், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறவும் சிறப்பு முகாம் நடந்தது.

முதல்வர் நன்றி

தமிழகத்தில் இன்று 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாரத்தான் வேகத்தில் செயல்படுத்திய செவிலியர்கள் மருத்துவர்களுக்கு நன்றி. தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். நம்மையும் நாட்டையும் காப்போம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

கொரோனா வைரஸ் தொற்றால் நினைவாற்றல் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?

கோ - வின் இணையதளத்தில் அறிமுகமானது புதிய வசதி

English Summary: Record of over 28 lakh vaccinations in a single day in Tamil Nadu
Published on: 13 September 2021, 07:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now