மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 March, 2024 11:35 AM IST
Recruitment in the state project monitoring unit

தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் கீழ் AGRISTACK / GRAINS திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநில திட்ட கண்காணிப்பு பிரிவில் ஒப்பந்த அடிப்படைப்பில் காலியாக உள்ள கணக்காளர், அலுவலக உதவியாளர், தட்டச்சர் உட்பட 8 பணிப்பிரிவில் மொத்தம் 23 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளதால் தகுதியான விண்ணப்பத்தாரர்கள் உடனடியாக விண்ணபிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடம் தொடர்பான அறிவிப்பாணையில், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் துறைக்குள் எடுக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் இந்த வேலைவாய்ப்பு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் பதவிக்கான தகுதியை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இனி காலிப்பணியிடங்கள் விவரம், அவற்றினை விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை காணலாம்.

மேற்குறிப்பிட்டது போல் 8 பணிப்பிரிவுகளில் மொத்தம் 23 காலியிடங்கள் உள்ளன.

Business Analyst:

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 3
  • கல்வித் தகுதி : MBA பட்டப்படிப்புடன் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
  • வயது: அதிகப்பட்சம் 45 வயது

Financial Analyst:

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 1
  • கல்வித் தகுதி : MBA (Finance) பட்டப்படிப்புடன் வங்கித்துறை சார்ந்து 10 வருட பணி அனுபவம்
  • வயது: அதிகப்பட்சம் 45 வயது

Clerical Assistant:

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 2
  • கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, அதனுடன் 3-5 வருட பணி அனுபவம்.
  • வயது: அதிகப்பட்சம் 40 வயது

Help Desk Operator:

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 10
  • கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, அதனுடன் 2 வருட பணி அனுபவம்
  • வயதுத் தகுதி: அதிகப்பட்சம் 35

Data Entry operator:

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 2
  • கல்வித் தகுதி : Sc (Computer Science) பிரிவில் தேர்ச்சியுடன், 2 வருட பணி அனுபவம்.
  • வயதுத் தகுதி: அதிகப்பட்சம் 35

தட்டச்சர்: (Typist)

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 2
  • கல்வித் தகுதி : தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரசின் சார்பில் வழங்கப்படும் தட்டச்சர் தேர்ச்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம். ( ஆங்கிலத்தில் - 40 WPM, தமிழில் (30 WPM) தட்டச்சு செய்ய வேண்டும்.
  • வயது: அதிகப்பட்சம் 35

Read also: KVK 50: ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பில் அசத்தும் பெண்- வெற்றிக்கு வழிக்காட்டிய அரியலூர் கேவிகே

Accountant:

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 1
  • கல்வித் தகுதி : Com பட்டப்படிப்புடன் 10 வருட பணி அனுபவம்.
  • வயதுத் தகுதி: அதிகப்பட்சம் 45

Office Assistant

  • காலியிடங்களின் எண்ணிக்கை : 2
  • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • வயதுத் தகுதி: குறைந்தது 18 வயதினை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட காலிப்பணியிடங்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் எனவும் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை என்ன?

8 பணிப்பிரிவுகளுக்கும் வருகிற 30 ஆம் தேதிக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள நிலையில், (https://www.tnagrisnet.tn.gov.in/includes/noti/AF.pdf ) இந்த லிங்கினை க்ளிக் செய்தால் விண்ணப்பப் படிவம் தோன்றும். பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபராக நீங்கள் இருப்பின் அதனை நகல் எடுத்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வேளாண் இயக்குநராக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அலுவலக முகவரி:

Director of Agriculture, Directorate, IT section, 4 th Floor, 1, Wallahjah Rd, PWD Estate, Chepauk, Triplicane, Chennai, Tamil Nadu 600 005.

30.03.2024க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் தாமதத்திற்கு துறை பொறுப்பாகாது எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது. பணியிடங்களை நிரப்புவது வேளாண்மை இயக்குனரின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more:

ONDC: விவசாயிகளின் கூட்டமைப்பான FPO லாபம் பார்க்க சூப்பர் வழி!

மாவுப்பூச்சி: விவசாயிகளின் மெயின் வில்லனே இதுதான்- கட்டுப்படுத்த என்ன வழி?

English Summary: Recruitment in the state project monitoring unit for implementing agristack and Grains project
Published on: 27 March 2024, 11:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now