இந்திய ராணுவத்தில், தொழில்நுட்ப வல்லுனர் உள்ளிட்ட 199 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உலக நாடுகளில் வல்லமைமிக்கதாகக் கருதப்படும் ராணுவங்களில் இந்திய ராணுவமும் ஒன்று. அத்தகைய சிறப்புமிக்க இந்திய ராணுவத்தில் (Indian Army) சேர்ந்து தாய்மண்ணுக்கு நாமும் சேவை செய்ய வேண்டும் என எண்ணுபவரா நீங்கள்? அப்படியால் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.
JAG 26(ஆண், பெண்), SSC Tehnician, SSCW Technician உள்ளிட்ட பணியிடங்களில் 199 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் ராணுவ இணையதளமான joinindianarmy.nic.in ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
கல்வித் தகுதி (Education Qualification)
-
JAG - 26 என்ற பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் (LLB) சட்டம் சார்ந்த பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.(Bachelor Degree in Law LLB with Minimum 55% Marks )அதேபோல் பார் கவுன்சிலில் (Bar Council)பதிவு செய்திருக்க வேண்டியது கட்டாயம்.
-
SSC(TECH) and SSCW(TECH) பணியிடங்களுக்கு பொறியியலில் வர்த்தகம் தொடர்பான இளநிலை பட்டம் (Bachelor Degree in Engineering in Related Trade ) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit)
குறைந்த பட்சம் : 20
அதிகபட்சம் : 27
காலக்கெடு (Last Date)
விண்ணப்பிக்கக் கடைசி தேதி நவம்பர் 11
மேலும் படிக்க...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற அரிய வாய்ப்பு - நவம்பர் 9ம் தேதி வரை காலக்கெடு!
MGNREGAவில் 44 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம்- 4 நாட்களே எஞ்சியிருப்பதால் முந்துங்கள்!