News

Thursday, 15 October 2020 06:47 AM , by: Elavarse Sivakumar

மன்ரேகா எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (MGNREGA)காலியாக உள்ள உதவியாளர், கம்ப்யூட்டர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 44 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலக்கெடு வரும் 19ம் தேதி முடிவடைய உள்ளது.

கொரோனா நெருக்கடியால், வேலையிழந்து, அடுத்து என்ன செய்வது என தெரியாமல், தவிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

MGNREGA Recruitment 2020

கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பை உறுதி செய்தும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில்(MGNREGA) , பணியாற்ற உதவியாளர் (Post of Assistant), கம்ப்யூட்டர் அசிஸ்டண்ட் மற்றும் Gram Rozgar Sahayak, பணியிடங்களில் 44 பேர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

காலியிடங்கள் (Vacancy)

  • உதவியாளர்                             - 4

  • Gram Rozgar Sahayak                - 36

  • கம்ப்யூட்டர் அசிஸ்டண்ட்          - 4

காலக்கெடு (Last Date)

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 19ம் தேதி

கல்வித் தகுதி

  • APO - இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பு

  • கம்ப்யூட்டர் அசிஸ்டண்ட் - BCA /B Tech/ MCA மற்றும் MS officeல் பணியாற்றத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

  • Gram Rozgar Sahayak (கிராம வேலைவாய்ப்பு உதவியாளர்) - 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு மற்றும் கம்ப்யூட்டர் அறிவு

முன்னுரிமை (Preference)

விவசாயிகளின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் முந்துங்கள்.

ஊதியம்(Salary)

அசிஸ்டண்ட்                         - Rs. 20,000/- per month

Gram Rozgar Sahayak             - Rs. 8,500/- per month

கம்ப்யூட்டர் அசிஸ்டண்ட்      - Rs. 11,000/- per month

விண்ணப்பிப்பது எப்படி? (How to apply)

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கல்வித் தகுதிக்கான ஆவணங்களுடன், வோலைவாய்ப்பு அலுவலகத்திற்கு உங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பிவைக்கவும். பிறகு விண்ணப்பித்த அனைவரும் pgrkm.com என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளவும்.

மேலும் படிக்க...

தினமும் ரூ.80 செலுத்தினால் ரூ.28 ஆயிரம் பென்சன்- LICயின் புதிய பாலிசி!

நாமக்கல் மருத்துவக் கால்நடை பல்கலைகழகத்தில், வேலை வாய்ப்பு! விபரம் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)