News

Saturday, 23 April 2022 11:16 AM , by: R. Balakrishnan

Recurrent Corona Vulnerability

நம் நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. இது, நான்காவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். 'இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 'பூஸ்டர் டோஸ்' செலுத்துவது அவசியம்' என, மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பூஸ்டர் டோஸ் (Booster Dose)

நாட்டில், கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதற்கிடையே, கொரோனா பரவலை தடுக்க, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இரண்டு 'டோஸ்' தடுப்பூசிகள் செலுத்தியோருக்கு, முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும், 'பூஸ்டர் டோஸ்' செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் புதிதாக 2,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, நம் நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, நான்கு கோடியே 30 லட்சத்து 52 ஆயிரத்து 425 ஆக உயர்ந்துஉள்ளது.

கொரோனா பாதிப்பு (Corona Attack)

மார்ச் 18க்குப் பின், ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. இதேபோல், நேற்று முன்தினம் 54 பேர் கொரோனாவால் உயிர் இழந்தனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை, ஐந்து லட்சத்து 22 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 14 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், நான்காவது அலை துவங்கி உள்ளதா என, மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

எதிர்ப்பு சக்தி (Immunity)

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் மூத்த விஞ்ஞானியும், இந்திய வம்சாவளியுமான டாக்டர் அமிதா குப்தா நேற்று கூறியதாவது: ஒருபுறம், மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. மறுபுறம், மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ்கள் உருவாகின்றன. எனவே, அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளுடன், பூஸ்டர் டோசும் செலுத்திக் கொள்வது அவசியம். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரை, கொரோனாவில் இருந்து யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவில், 2 சதவீத மக்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.

இதன்படி, அங்கு முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்வோருக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.

இதேபோல், பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர் களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே, உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும், வகுப்பில் கொரோனா அறிகுறிகளுடன் யாராவது இருந்தால், அதுகுறித்து தலைமை ஆசிரியர் வாயிலாக, மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட்: முகக்கவசம் முக்கியம்!

டெல்லியில் இலவசமாகும் பூஸ்டர் டோஸ்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)