News

Monday, 08 November 2021 07:22 PM , by: R. Balakrishnan

Red Alert For Tamilnadu

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி அதி கனமழை பெய்யும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட் (Red Alert)' எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலர்ட்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் வரும் 10, 11ம் தேதிகளில் (ரெட் அலர்ட்) அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை (நவம்பர் 09) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 11ம் தேதி அதிகாலை வட தமிழக கடற்கரையை நெருங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது தீவிரம் அடைந்து 11ம் தேதி தமிழகம் அருகே வரும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , கடலூர், விழுப்புரம் , வேலூர், ராணிபேட்டை , சேலம் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை , கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை , திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட். தஞ்சை , திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி , புதுக்கோட்டை,ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மிக கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை!

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)