News

Friday, 05 October 2018 05:49 PM

வரும் 8 -ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இத்துடன் தமிழகத்தில் வரும் 7-ம் தேதி மிக தீவிரமான கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
 7 ஆம் தேதி முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 8 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தயார் நிலையில் இருக்க வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.  7ஆம் தேதி அன்று, 25 செ.மீ., அளவுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனையடுத்து மலை மற்றம் கடல் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அக்டோபர் 8ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை முன்னதாகவே தொடங்கவுள்ளது.  வரும் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாறி ஓமன் நாட்டிற்கு செல்லும். ரெட் அலர்ட் பாதிப்பு எதுவும் இல்லை, கனமழை பெய்யும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)