News

Wednesday, 30 October 2019 10:45 AM

தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் பல இடங்களில் கனமழை துவங்கியுள்ளது. இந்த மழையானது இன்னும் 3,4 தினங்களுக்கு நீடிக்கும் எனவும், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து,  தென்மேற்கு வங்ககடலில் இலங்கையின் தென்கிழக்கே நிலைக் கொண்டுள்ளது. இது குமரி கடல் நோக்கி நகர்ந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற இருப்பதால் அடுத்த 48மணி நேரத்தில் குமரிக்கடல்-மன்னார்வளைகுடா வழியாக லட்சதீவு சென்று அரபிக்கடலில் தீவிரமடையும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒரிரு நாட்கள்  குமரிக்கடலில் நிலை கொள்ளவோ அல்லது  நகரவோ வாய்ப்பு உள்ளது என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கடந்த ஒரு சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்யவுள்ளது. கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமேஸ்வரம்,  பாம்பன்,  தஞ்சாவூர், திருவாரூர்,  நாகப்பட்டினம், காரைக்கால், நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். இதன் காரணமாக அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் போன்ற வட மாவட்டங்களிளும், புதுவையில் ஆங்காங்கே ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் இன்றும்/நாளையும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்கால் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் மன்னார்வளைகுடா,குமரிக்கடல்,  தென்மேற்கு வங்ககடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Anitha Jegadeesan 
Krishi Jagran 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)