News

Monday, 01 March 2021 09:35 AM , by: Daisy Rose Mary

நாடுமுழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. கோவின் (COWIN 2.0 app) மற்றும் ஆரோக்கிய சேது செயலி (Aarogya Setu)மூலம் காலை 09:00 மணி முதல் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக பிரதமர் நரேந்திரமோடி கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

யாருக்கு தடுப்பூசி அனுமதி?

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த இந்த தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயலி மூலம் சுயமாகவும் (self register), அரசு மருத்துவமனைகள், பொதுச் சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம்.

தேவையான ஆவணங்கள்

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தங்கள் வயது சான்றுக்காக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஓய்வூதிய அட்டை, பான் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு தடுப்பூசி மையத்துக்கு வர வேண்டும்.

45 வயது முதல் 59 வயது வரையிலான கூட்டு நோய்களுடன் இருப்பவர்கள் ஒரு மருத்துவரிடமிருந்து தனக்கு என்ன கூட்டு நோய் உள்ளது என குறிப்பிட்டு ஒரு கடிதம் பெற்று வரவேண்டும்.

எந்த தடுப்பூசி மையத்துக்கும் யார் வேண்டுமானாலும் செல்லலாம். அங்கு சென்ற பிறகு நேரடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களின் விவரங்கள் தடுப்பூசி மையத்தில் சேகரிக்கப்பட்டு கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இரண்டாவது டோஸ் குறித்த தகவல்கள் பதிவு செய்யும் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும்.

தமிழக அரசின் நடவடிக்கை

தமிழகத்திலும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கோவிட்-19 தடுப்பூசி போடுவதை அதிகரிக்க, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10,000 தனியார் மருத்துவமனைகளும், மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும் பயன்படுத்தப்படவுள்ளன.

தனியார் மையங்களில் 250 கட்டணம்

இன்று தொடங்கும் இந்த இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நாடு முழுவதும் 27 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்க உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் மூலம் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு தடுப்பூசி

இதனிடையே, டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்பட வேண்டாம். ஒன்றாக, இந்தியவை கொரோனாவில் இருந்து விடுவிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!!

தமிழைக் கற்கும் முயற்சியில் Fail ஆனேன் - பிரதமர் மோடி!

வரும் 3ம் தேதி வரை வாட்டி வதைக்கப் போகிறது வெயில்!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

பழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி- TNAU ஏற்பாடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)