கனமழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரண தொகையாக தலா, 2,000 ரூபாய் வழங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை கொடூரம் நிலவி வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. மேலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரண தொகையாக தலா 2,000 ரூபாய் வழங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலிக்கிறது.
இது தொடர்பாக, தமிழக அரசு அதிகாரி ஒருவர், சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்குகளில் தலா 5,000 நிவாரணத் தொகை செலுத்தப்பட்டது. தற்போது ஏற்பட்டு உள்ள மழை பாதிப்புகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து, நிலவரங்களை அறிந்தார்.
சென்னை, போரூர் அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் போது, மழை பாதிப்பு சரியாகும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றார்.
மேலும் படிக்க:
வெறும் ரூ.20,000 செலவு செய்து 3.5 லட்சம் சம்பாத்தியம்!
தினமும் 4,000 முதல் 5,000 ரூபாய் வரை சம்பாரிக்க இந்த தொழிலை தொடங்குங்கள்!