நிவர் புயல் (Nivar Cyclone) குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காவல்துறை உள்ளிட்ட மீட்புப் படைகளை தொடர்பு கொண்டு உரிய முன்னெச்சரிக்கை (Precaution) நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 2,999 முகாம்களில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கடலூரில் மட்டும் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுகிதளில் வசிக்கும் மக்கள் அந்த முகாமில் தங்க வைத்துள்ளோம்.
நெற்பயிர்கள் சேதம்:
புயல் காற்றினால் கடலூரில் 321 மரங்கள் சாய்ந்தன. அனைத்து மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் நிறுத்தப்படாவிட்டால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அரசு அறிவிப்புகளை (Government notices) மக்கள் சரியாக பின்பற்றியதால் பெரும் பாதிப்பு தவிர்க்க பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 1,611 ஹெக்டர் நெற்பயிர்கள் (Paddy crops) வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.
விவசாயிகளுக்கு நிவாரணம்:
முழுமையாக கணக்கெடுத்த பின்னர் சரியான புள்ளிவிவரங்கள் (Statistics) கிடைத்த பிறகு விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும். காப்பீடு (Insurance) செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் (Disaster Fund) இருந்து நிவாரணம் வழங்கப்படும். இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள். அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே இன்று பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கூட்டுறவு வங்கிகளைப் போல் இனி மாநில வேளாண் வங்கியிலும் விவசாயக் கடன்!