உங்கள் பகுதி வாக்குச்சாவடிக்கே போகாமல் வாக்களிக்கும் 'ரிமோட் ஓட்டிங்'முறை அடுத்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்படும், என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்தார்.
5 மாநிலங்களில் தேர்தல் (Elections in 5 states)
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு, கூட்டணி தொகுதி உடன்பாடு, கட்சிகளின் அனல்பறக்கும் பிரசாரம் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது:
ஆய்வு (Research)
தேர்தலில் ஓட்டளிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி., (IIT)யுடன் இணைந்து, ஆய்வு செய்து வருகிறோம்.
ரிமோட் ஓட்டிங் (Remote Voting)
ரிமோட் ஓட்டிங் (Remote Voting) எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக, தேர்தலின் போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும்.
எங்கிருந்தும் வாக்களிக்கலாம் (You can vote from anywhere)
நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்குச் சென்று, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம். இந்தப் புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சி, இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்கும்.
மக்களவைத் தேர்தல் (Lok Sabha election)
மக்களவைக்கு வரும் 2024ம் ஆண்டு நடக்கும் தேர்தலில், ரிமோட் ஓட்டிங் (Remote Voting) முறையை அறிமுகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி, வாக்காளர்களால் ஓட்டளிக்க முடியாது. தேர்தலின்போது, இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மையத்திற்கு நேரில் சென்று, ஓட்டளிக்க வேண்டும்.அந்த மையத்தில், பயோ-மெட்ரிக் (Bio-Metric)சாதனங்களும், வெப் கேமராவும் (Web Camera)இருக்கும்.
சிறப்பு மையம் (Special Booth)
தேர்தலின்போது, இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மையத்திற்கு நேரில் சென்று, ஓட்டளிக்க வேண்டும்.அந்த மையத்தில், பயோ-மெட்ரிக் (Bio-Metric) சாதனங்களும், வெப் கேமராவும் (Web Camera)இருக்கும்.
மேலும் படிக்க....
வாட்டி வதைக்கும் வெயில் எதிரொலி- மண்பானை விற்பனை அதிகரிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்- 6,000க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்!