73 வது குடியரசு தின அணிவகுப்பில் 13 மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
மாநிலங்களின் அணிவகுப்பு (parade of state pride)
குஜராத்தில் பழங்குடியினர் இயக்கம் என்ற தலைப்பில் குஜராத் மாநில அலங்கார ஊர்தி இடம்பெற்றது. அதில், பழங்குடியினரின் சுதந்திர போராட்ட திறன் எடுத்து காட்டப்பட்டிருந்தது.
உத்தர்காண்ட் மாநிலம் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியில், ஹேம்குந்த் சாஹிப் குருத்வாரா, டோப்ரா - சண்டி பாலம் மற்றும் பத்ரிநாத் ஆலயம் இடம்பெற்றிருந்தது.
கோவாவின் அணிவகுப்பு ஊர்தி கோவா பாரம்பரிய சின்னங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றது. அதில், அகுடா செங்கோட்டை, பனாஜியில் உள்ள வீரமரணம் அடைந்தவர்களின் நினைவிடம், டோனா பவுலா ஆகியவை இடம்பெற்றன.
விளையாட்டில் முதலிடம் என்ற தலைப்பில் ஹரியானா மாநில அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது. 2020ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஹரியானாவீரர்கள் 4 பதக்கங்களையும், பாராலிம்பிக்கில் ஹரியானா வீரர்கள் 6 பதக்கங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா - பாரம்பரிய காதிகிராப்ட் என்ற தலைப்பிலும், பஞ்சாப் மாநிலம் - சுதந்திர போராட்டத்தில் பங்கு என்ற தலைப்பிலும்,
அருணாச்சல பிரதேசம் அங்கிலோ ஏபிஓஆர் போர் என்ற தலைப்பிலும்,
ஜம்மு - காஷ்மீர் - காஷ்மீரின் முகம் மாறுகிறது என்ற தலைப்பிலும், மேகாலயா- பெண்கள் தலைமையிலான சமுகம், பெண் சுய உதவிகுழுக்கள் என்ற தலைப்பிலும் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.
மஹாராஷ்டிரா, உ.பி., டில்லி, சட்டீஸ்கர் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றன.
வீர சாகசம் (Heroic adventure)
குடியரசு தின விழாவில் முதல்முறையாக வானில் 75 விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தியுள்ளன.
ராஜபாதையில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தின. பழமையான விமானங்கள் தொடங்கி இன்றைய நவீன ரபேல், சுகோய், ஜாகுவார் எம்ஐ-17, சாரங், அப்பாச்சி, டகோட்டா விமானங்கள் மூலம் ராஜபாதையின் மேலே சாகசம் நடத்தின.
மேலும் படிக்க
குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி, முப்படைகளின் மரியாதையை ஏற்றார் ஜனாதிபதி!
வீரமாய் செயல்பட்ட 6 இராணுவ வீரர்களுக்கு சவுரிய சக்ரா விருது!