மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 October, 2020 7:03 AM IST

சேலம் மாவட்டத்தில், கெங்கவல்லி அருகே வீரகனூரில், புகழ்பெற்ற கால்நடைச் சந்தை (Livestock market) மீண்டும் துவக்க வேண்டும் என்று அப்பகுதியினரும், வியாபாரிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இம்மாவட்டத்தில் கால்நடைச்சந்தை மின்னாம்பள்ளிக்கு அடுத்து, மாவட்ட எல்லையில் உள்ள வீரகனூர் (Weerakanur) சந்தை தான் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது. இச்சந்தை மீண்டும் துவக்கப்பட்டால், ஊரடங்கால் (Lockdown) பெரிதும் பாதிக்கப்பட்ட, விவசாயிகளின் வாழ்வு வளமாகும்.

வீரகனூர் கால்நடைச் சந்தை:

வீரகனூர் கால்நடைச்சந்தை, வெள்ளிக்கிழமை பிற்பகல் துவங்கி, விடிய விடிய நடைபெற்று, சனிக்கிழமை பிற்பகல் முடிவடையும். இச்சந்தையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து அனைத்து வகை ஆடுகள், மாடுகள், காளைகள், கன்றுக்குட்டிகள் அனைத்தும் லாரி, டெம்போ, ஆட்டோக்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதேபோல் கால்நடைகளை வாங்குவதற்கு வியாபாரிகள், நான்கு சக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு வந்துவிடுவர். விடிய விடிய மாட்டு வியாபாரம் நடைபெறும். வீரகனூரில், வாரச்சந்தை நடைபெறும் பகுதியில்தான், கால்நடை சந்தையும் நடைபெறுகிறது. வீரகனூர் பேரூராட்சிக்கு, இதன்மூலம் கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.

ஊரடங்கால் வியாபாரம் பாதிப்பு:

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் பொதுமுடக்கம் தொடங்கி, ஆகஸ்ட் வரை தொடர்ந்து ஐந்துமாதமாக, கொரோனா வைரஸ் ( Corona Virus) பரவாமல் தடுக்கும் நோக்கத்தில், காய்கறி வாரச்சந்தை, கால்நடை சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனையடுத்து புகழ்பெற்ற வீரகனூர் கால்நடைச் சந்தையும், இதுவரை நடைபெறவில்லை. இதனால், பெரும் வியாபார இழப்பும், வருமான இழப்பும் (Loss of income) ஏற்பட்டுள்ளது. இது குறித்து, வீரகனூர் பகுதியைச் சேர்ந்த சில மாட்டு வியாபாரிகள் கூறியதாவது, வீரகனூர் கால்நடைச் சந்தையில் வழக்கமாக ஒரு கோடி வரை வியாபாரம் நடைபெறும். அதுவும் குறிப்பாக, தீபாவளி போன்ற பண்டிகைக்கு முன்னர் நடக்கும் கால்நடை சந்தையின் மொத்த வியாபாரம், இரண்டு கோடி ரூபாயைத் தாண்டும் என்பது நம்பமுடியாத உண்மை. கால்நடை சந்தை, 5 மாதமாக நடைபெறாததால், கால்நடைகளை ஒரே இடத்தில் அனைத்து ரகங்களையும் பார்த்து, பார்த்து பிடித்ததை வாங்கிச்செல்ல முடியவில்லை. வியாபாரிகளும், விற்பவர்களும் இச்சந்தை இல்லாததால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளத்திலிந்தும் வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

சமூக ஆர்வலரின் கருத்து:

விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமே, கால்நடைகள் தான். கால்நடைகளை விற்றுத் தான், தங்களது முக்கிய செலவினங்களை விவசாயிகள் செய்கின்றனர். எனவே, தமிழக அரசு, விவசாயிகள் நலன் கருதி, கால்நடை சந்தைகளை சமூக இடைவெளியுடனும் (Social Distance), பாதுகாப்புடனும் நடத்திட, அனுமதி வழங்கிட வேண்டும் என, சமூக ஆர்வலர் மகாராஜா மணிகண்டன் (Maharaja Manikandan) கூறினார்.

விவசாயிகள் கோரிக்கை:

கிட்டத்தட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள தமிழக அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரமான கால்நடைச் சந்தைகளை மீண்டும் இயக்கிட, தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என விவசாயிகளும், வியாபாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது தான் வீரகனூர் கால்நடைச்சந்தை மீண்டும் இயங்கி, விவசாயிகளின் வாழ்வாதாரம் (Livelihood) மேலோங்கி, நிலையான வருமானத்தைப் பெற இயலும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

கொரோனா பரவலால் மூடப்பட்ட, கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது!
மகிழ்ச்சியில் வியாபாரிகள்!

வாழையில், வாடல் நோயைக் கட்டுப்படுத்தி, விளைச்சலை அதிகரிப்பது எப்படி?

பயிர்களைப் பாதுகாக்க விதை நேர்த்தி முறையை, கையாள்வது எப்படி?

 

English Summary: Request to reopen Salem district's second largest livestock market!
Published on: 07 October 2020, 07:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now