News

Friday, 23 September 2022 06:14 PM , by: T. Vigneshwaran

Paddy Seeds

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வேளாண் அதிகாரி சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில் பாரம்பரிய விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக நெல், நிலக்கடலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெய்துவரும் தென் மேற்கு பருவமழையின் காரணமாக ஆனைமலை பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை பயிரிட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள நெல் விதைகளை வாங்க வருமாறு வேளாண் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறுகையில், “ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நெல் வகைகள் 200 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் கருப்பு கவுனி 60 கிலோ மற்றும் சீரக சம்பா 140 கிலோ விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் 25 ரூபாய்க்கு விற்கப்படும் பாரம்பரிய விதை நெல் அரசு மானிய விலையில் 12 ரூபாய் 50 காசுகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு 10 கிலோ வரை நெல் விதைகள் வழங்கப்படுகிறது. இதனை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க:

அரசு: குருவை பயிர் விதைகளுக்கு 90 முதல் 100% மானியம்

விவசாயிகளுக்கு தீபாவளிக் பரிசு, அரசு 35,250 ரூபாய் வழங்கும்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)