Rise in Cotton Prices
இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் போகமாக பருத்தி, பயறுவகை, தானியங்கள் சாகுபடி செய்ய வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்ற பஞ்சு தற்போது ரூ.60 முதல் ரூ.87 வரை விலை கிடைக்கிறது. ஆகையால், பருத்தி சாகுபடியில் விவசாயிகள் பலர் ஈடுபட்டுள்ளனர். மேலும், நல்ல விலை போகும் என்பதால் ஆர்வத்துடன் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவதை காண முடிகிறது.
பருத்தி சாகுபடி (Cotton Cultivation)
இராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடக்கிறது. குறிப்பாக சத்திரக்குடி, பரமக்குடி, உத்திரகோசமங்கை, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். இவ்வாண்டு மழை காரணமாக ஊரணிகளில் தண்ணீர் உள்ளதால் பருத்தி சாகுபடி அதிகரித்துள்ளது. மேலும் வெளியூர்களில் இருந்து பருத்தி பஞ்சு வரத்து குறைந்துள்ளதால் இராமநாதபுரம் சந்தையில் பஞ்சு விலை உயர்ந்துள்ளது.
பஞ்சு விலை வியர்வு (Cotton price Raised)
ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.87 வரை விலைபோகிறது. இனிவரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இராமநாதபுரம் ஆணைக்குடி விவசாயி மாரி கூறுகையில், '2 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளேன். இங்கிருந்து பஞ்சு மொத்த வியாபாரிகள் மூலம் ராஜபாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது அதிக விலை கிடைப்பதாலும், ஊரணிகளில் தண்ணீர் உள்ளதால் நிறைபேர் சாகுபடி செய்கின்றனர்,' என்றார்.
மேலும் படிக்க
பருத்தி சாகுபடியில் ஆர்வத்துடன் செயல்படும் விவசாயிகள்!
திருவாரூர் மாவட்டத்தில் உளுந்து, பயறு சாகுபடி பணிகள் மும்முரம்!