பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 June, 2022 5:27 AM IST
Monkey pox

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது குரங்கம்மை நோய் பாதிப்பு வெகுவாக பரவி வருகிறது. அடுத்தடுத்து பரவி வரும் நோய்களால், பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்நாட்டில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியானதால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது.

குரங்கம்மை நோய் (Monkey pox)

1970 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக மனிதர்களுக்கு குரங்கம்மை நோய் பரவியுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. குரங்கம்மை நோய் வேகமாக பரவும் தன்மை கொண்ட நோயல்ல என்றாலும், சமூகப் பரவலாக மாறக் கூடிய அபாயம் இருக்கிறது. ஆகவே, இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து உலக நாடுகளும் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.

பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, சுவீடன், போர்ச்சுக்கல், ஸ்பெயின், கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில், இதுவரையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில், மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியானதை, அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 470 ஆக உயர்ந்துள்ளது. குரங்கம்மை நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால், பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என இங்கிலாந்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்களை, இந்த குரங்கம்மை நோய் மிக எளிதில் தாக்க வாய்ப்புள்ளது. இதனால், அவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்திப்படுகிறார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

கஞ்சா வளர்க்க இந்த நாட்டில் தடையில்லை: அதிரடி அறிவிப்பு!

முடிவுக்கு வராத கொரோனா: விழிப்புணர்வு அவசியம்!

English Summary: Risk of monkey pox rising in UK!
Published on: 17 June 2022, 05:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now