இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் கூட்டம் ஆக.3ஆம் தேதி முதல் தொடங்கி மும்பையில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கடன்களுக்கான ரிசர்வ் வங்கி வட்டியை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த வாரம் அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை 0.35 புள்ளிகள் வரை உயர்த்தியது. இதனால் இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் நாள்களில் வட்டி வீதத்தை உயர்த்தும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி வீதத்தை 0.50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய சக்தி கந்த தாஸ், “நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், ரெப்போ வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் கடன்களுக்கான வட்டி வீதம் 4.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணவீக்கம் அதிகரித்தே காணப்படும்” எனத் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்பு நாட்டில் வட்டி வீதம் 5.15 சதவீதம் ஆக இருந்தது.
தற்போது, 5.40 ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில் மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதமாக கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. எனினும் நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 15 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
உலகம் முழுக்க பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தும் வட்டியை உயர்த்தியுள்ளது. இந்த ரெப்போ வட்டி வீதம் உயர்வு காரணமாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன்கள் அதிகரிக்கக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: