கோடை காலம் முடிந்துவிட்ட நிலையிலும் கூட, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினம் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. தென்தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகப்பட்சமாக பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): Zone 15 சோழிங்கநல்லூர் (சென்னை) 17, சோழிங்கநல்லூர் (சென்னை) 10, சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 9, தாம்பரம் (செங்கல்பட்டு), சாய்ராம் கல்லூரி ARG (செங்கல்பட்டு) தலா 6, VIT சென்னை AWS (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) தலா 5.
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்த வகையில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுத்தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
21.09.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22.09.2024 மற்றும் 23.09.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24.09.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.09.2024 முதல் 27.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு (21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வளிமண்டல சுழற்சியினை பொறுத்து தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் பயணிக்க உள்ள மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பான மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் அறிவுறுத்தப்படுகிறது.
Read more:
உட்புற அறையில் குங்குமப்பூ சாகுபடி- லட்சங்களில் வருமானம் ஈட்டும் 64 வயது பெண்!
வேப்பங் கொட்டை சாறு- இயற்கை பூச்சி விரட்டியாக பயன்படுவது எப்படி?