மாடித்தோட்டம் மற்றும் தோட்டக்கலை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு எளிய அளவிலான இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தி லிவிங் கிரீன்ஸ் ஆர்கானிக்ஸ் (The Living Greens Organics) இன்று கிரிஷி ஜாக்ரான் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
கிரிஷி ஜாக்ரானின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான எம்.சி. டொமினிக் மற்றும் தி லிவிங் கிரீன்ஸ் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரதீக் திவாரி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
டெல்லியில் உள்ள கிருஷி ஜாக்ரான் அலுவலகத்தில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் பேசிய எம்.சி.டொம்னிக், சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகள் தொடர்பான தோட்டம் அமைப்பதில் லிவிங் கிரீன்ஸ் ஆர்கானிக்ஸ் அமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது, என்றார்.
தி லிவிங் கிரீன்ஸ் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான பிரதீக் திவாரி கூறுகையில், எங்கள் நிறுவனமானது மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் மற்றும் வீட்டு சமையல் தோட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. இந்த அனைத்து வகையான விவசாயத்திற்கும் இயற்கை வேளாண்மை கருவிகளையும் வழங்குகிறோம். மேலும், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளின் பசுமையை அதிகரிக்கவும் எங்களது அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதாவது, ஒரு குறிப்பிட்ட திறந்தவெளியில் காய்கறிகள் அல்லது மரக்கன்றுகளை வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் நாற்றுகளையும் வழங்கி வருகிறோம். இதுதவிர பயிர்களின் பராமரிப்பு மற்றும் அவற்றை வளர்ப்பதற்கான முழுமையான தகவல்கள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கி வருகிறோம்.
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் வெப்பநிலை தாக்கத்தினை சந்தித்து வருகின்றனர். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுவதோடு, நல்ல ஆரோக்கியமான காய்கறிகள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு எங்களது நிறுவனமான தி லிவிங் கிரீன்ஸ் ஆர்கானிக்ஸ் தீர்வுகளை வழங்குகிறது.
உங்கள் வீட்டில் வெப்பநிலையைக் குறைக்க தோட்டக்கலையில் ஈடுபடுவது ஒரு சிறந்த வழியாகும். அரசுகளும் எங்களுடன் கைகோர்த்துள்ளன. ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு ஒரு துணையாக நாங்கள் எங்கள் திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளோம் என்றார். கிரிஷி ஜாக்ரான் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டு The Living Greens Organics செயல்பட்டு வருகிறது. அதிகமான நுகர்வோர் மாடித்தோட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாடித் தோட்டம் பற்றிய தொடர் தகவல்களை வழங்குவதற்காக, லிவிங் கிரீன்ஸ் ஆர்கானிக்ஸ் நிறுவனம், கிருஷி ஜாக்ரான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது.
தி லிவிங் கிரீன்ஸ் ஆர்கானிக்ஸ் பற்றிய கூடுதல் தகவலுக்கு, https://thelivinggreens.com/ ஐப் பார்வையிடவும். இந்நிகழ்வில் கிருஷி ஜாகரனின் இயக்குனர் ஷைனி டொமினிக் மற்றும் தி லிவிங் கிரீன்ஸ் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
PMSSY scheme: மீனவ விவசாயிகளுக்கு 60 % மானியம் வரை கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்