News

Friday, 02 October 2020 03:59 PM , by: KJ Staff

Credit: Dinakaran

ஆரம்ப காலகட்டத்தில் பெய்த மழையை நம்பி பல ஆயிரம் செலவு செய்து விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது, செடிகள் முளைத்து வரும் நிலையில் மழை இல்லாமல் கருகி போவதைக் கண்டு, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர் விவசாயிகள்.

ராபிப் பருவப் பயிர்கள் விதைப்பு:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில், உள்ள மானாவாரி நிலங்களில் (Rainfed lands) மழையை மட்டுமே நம்பி, விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ராபி பருவத்தில் (Robbie season) பருத்தி, உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவது வழக்கம். இந்தாண்டு, ஆரம்ப காலகட்டத்தில் பெய்த மழையை நம்பி, விவசாயிகள் ஆர்வமுடன் நிலங்களை உழுது, விதைகளை விதைத்து, பயிரிட்டு வந்தனர். ஆனால், ஆரம்ப காலகட்டத்தில் பெய்த மழையை தவிர, தற்பொழுது மழை பெய்யமால் பொய்த்து போன காரணத்தினால், நிலங்களில் முளைத்து இருக்கும் செடிகள் கருகும் நிலையில் உள்ளது.

கருகும் பயிர்கள்:

பல நிலங்களில் விதைகள் முளைக்காமல் கருகிப்போய் உள்ளது. ஒரு ஏக்கருக்கு 10,000 முதல் 15 ,000 ரூபாய் வரை செலவு செய்து, விளைந்து வரும் பயிர்கள் கருகிப்போவதை கண்டு விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மழை பெய்யாத வானத்தினை நோக்கி நொந்து ஒவ்வொரு நாளையும் கடத்தி செல்கின்றனர். சில விவசாயிகள் தங்களது கருகும் பயிர்களை காப்பற்ற வேண்டும் என்பதற்காக நிலங்களில் டிராம்கள் வைத்து, அதில் தண்ணீர் நிரப்பி கருகி போகும் நிலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அவ்வாறு தண்ணீர் ஊற்றியும் செடிகள் கருகிப்போகி விடுவதாகவும், மழை பெய்தால் மட்டுமே செடிகள் தப்பித்து கொள்ளும், இல்லையென்றால் அனைத்து செடிகளும் கருகி போய்விடும் என்கின்றனர் வேதனையுடன்.

Credit: Dinamani

விலைக்கு வாங்கப்படும் தண்ணீர்:

நிலம் உழுவது முதல் தற்பொழுது வரை 50,000 வரை செலவு செய்து விதைத்துள்ளதாகவும், ஆனால் மழை இல்லாத காரணத்தினால் செடிகள் கருகி வருவதாகவும், இருக்கிற செடிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தண்ணீரை விலைக்கு வாங்கி, செடிகளுக்கு ஊற்றி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். மழையை நம்பி மட்டுமே பயிரிட்டு வந்தோம், மழை இல்லாத காரணத்தினால் செடிகள் காய்ந்து (Dry) அழிந்து போகும் என்றும், கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், விலைக்கு தண்ணீர் வாங்கி, கருகும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் செடிகள் கருகி அழிந்து விடுவதாகவும், இன்னும் 2 தினங்களில் மழை பெய்யவில்லை என்றால் செடிகளை காப்பாற்ற முடியாது என்கிறார்கள் விவசாயிகள்.

இழப்பீடு வேண்டும் விவசாயிகள்:

மழையை வைத்து தான் எங்களுடைய வாழ்வாதரம் (Livelihood) உள்ளது. பல ஆயிரம் செலவு செய்து, எங்களுக்கு எவ்வித பலனும் இல்லாத நிலை உள்ளது. எனவே அரசு, விவசாயிகளுக்கு உதவ வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்கிறார்கள் கோவில்பட்டி விவசாயிகள். இனிமேல், கடன் வாங்கி விவசாயம் செய்ய முடியாது என்பதால் தமிழக அரசு இழப்பீடு (Compensation) வழங்க வேண்டும் என்கிறார்கள்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

உபரிநீரை மட்டுமே தந்து, தமிழகத்தை வஞ்சிக்கிறது கர்நாடகா! காவிரி நீர் குழுமம் தகவல்!

விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமே மழை அதிக அளவு பெய்து வெள்ளமாக மாறுவது தான்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

விடைபெறத் துவங்கியது தென்மேற்குப் பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)