கொரோனாவைத் தொடர்ந்து ஒமிக்ரான் தொற்று பரவும் ஆபத்து இருப்பதால், தமிழகத்தில் 1முதல் 8ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை (Precautionary measures)
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவத் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து, தமிழ்நாட்டிலும் ஒமிக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதிரடி உத்தரவுகள் (Orders of Action)
-
பள்ளிகள், விடுதிகளில் ஆங்காங்கே இருக்கும் நீச்சல் குளங்கள் மூடப்பட வேண்டும்.
-
தனிமனித இடைவெளி பள்ளிகளில் கட்டாயம் பின்பற்றவேண்டும்.
-
முகக்கவசம் அணிவது கட்டாயம், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
-
நாட்டுநலப் பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது.
-
இறைவணக்கம், கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
-
1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறை மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
-
ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழக பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த முதல் உத்தரவு இதுவாகும்.
ஒமிக்ரான் அச்சம் (Fear of Omicron)
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி தான் திறக்கப்பட்டன. 1ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்டன. அதற்குள் ஒமிக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மழை காரணமாகவும் அவ்வப்போது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவ - மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேர்ந்தது.
மேலும் படிக்க...