மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளையும், ஆயிரக்கணக்கான விளை நிலங்களையும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதலமைச்சர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இன்று (14.11.2022) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி மானியம்
மேலும் படிக்க: குழந்தை பருவ புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு