கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவாதத்துடனான 1.1 லட்சம் கோடி நிதி திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Seetharaman) அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர் கொரோனா நிவாரண நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.
கடன் வசதி
- கொரோனாவால் அடிவாங்கிய துறைகளுக்கு மொத்தமாக 1.1 லட்சம் கோடி ரூபாய் உத்தரவாத கடன் (Loan) வழங்கப்படும்.
- மருத்துவ துறைக்கு 7.95 சதவீதத்துடன் 100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
- கொரோனாவால் (Corona) பாதித்த மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.
- சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டுமே 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்
- சுகாதாரத் துறை தவிர்த்து மற்ற துறைகளுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும், அதற்கான வட்டி விகிதம் (Interest Rate) 8.25 சதவீதமாக இருக்கும்.
- அவசர கால கடனாக (Emergency loan) தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் கோடி கடன் வழங்கப்படும்
- 25 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு 1.25 லட்சம் ரூபாய் வரையிலும், டூரிஸ்ட் ஏஜென்ஸிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு (Tourist Guides) 1 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
- 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா (Free Visa) வழங்கப்படும்.
மேலும் படிக்க
சிபிஎஸ்இ வகுப்பு 12 வாரிய தேர்வு 2021 முடிவுகள்,தேர்வு மதிப்பெண்கள் கணக்கீடு