பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த கூட்டத்தில், பருவம் தவறிய மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.20000 என்ற வீதம் நிவாரணம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20000 ரூபாய் என்ற கணக்கில் நிவாரணம் வழங்குவதற்கு 53 கோடி ரூபாய் செலவாகும் எனவும் டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், “டெல்லியில் கடந்த செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் கனமழையால் வயல்கள் மூழ்கின.
இதனால் விவசாயிகளின் பயிர்கள் கடுமையாக நாசமாகின. பயிர்சேதம் குறித்து மதிப்பிடுவதற்காக களத்திற்கு நேரடியாக குழுக்கள் அனுப்பப்பட்டன” என்று தெரிவித்துள்ளது. பயிர் சேதத்துக்கு வழங்கப்படும் நிவாரணத்துக்கான விகிதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு விவசாயிக்கு 70%க்கு கீழ் இழப்பு ஏற்பட்டிருந்தால் 70% நிவாரணம் வழங்கப்படும். மேலும், 70%க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருந்தால் 100% முழு நிவாரணமும் வழங்கப்படும்.
மேலும் படிக்க: