உஜ்வாலா திட்டத்தில் 12 சிலிண்டர்களுக்கு தலா 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது. ஏற்கனவே மானியம் முறையாக வந்துசேர்வதில்லை என்றக் குற்றச்சாட்டு மக்களிடையே பரவலாக உள்ளது.
ரூ.1000த்தைத் தாண்டி
வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் விலை ஆயிரத்தைத் தாண்டிருப்பது நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் மத்திய அரசு மீது அதிருப்தி ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.
இந்நிலையில், இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மேலும், சிமெண்ட் விலையை குறைக்கவும், சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும் என்றும் சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்றும் சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!