News

Tuesday, 22 November 2022 06:38 PM , by: T. Vigneshwaran

Pension Scheme

தனியார் துறையில் பணியாற்றுவோர் ஓய்வுகாலத்துக்குப்பின், பெரிய தொகையை பெறுவதும், பார்ப்பதும் கடினமான விஷயம். பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில் எந்தவிதமான இடர்பாடுகளும் இல்லாமல் முதலீடு செய்து நீண்டகாலத்தில் பணவீக்கத்தை முறியடிக்கும் பணப் பலனைப் பெற வேண்டும்.

இதற்கு முதலீட்டுச் சந்தையில் ஏராளமன கருவிகள் உள்ளன. வைப்புத் தொகை, பிபிஎப், தேசிய பென்ஷன் திட்டம் போன்றவை உள்ளன. இதில் தாமாக முன்வந்து ஓய்வுகாலத்துக்காக சேமிக்கும் திட்டம்தான் தேசிய பென்ஷன் திட்டம்(NPS).

ஓய்வுகாலத்தில் குறிப்பிட்டதொகை தங்களுக்கு ஓய்வூதியமாகக் கிடைக்க வேண்டும் என்று விரும்புவோர் ஒவ்வொரு மாதமும் சேமித்துவந்தால், ஓய்வுக்காலத்தில் ஓய்வூதியம் பெற முடியும்.நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஓய்வுகாலத்தில் குறிப்பிட்ட தொகையை பெற வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

நீங்கள் தனியார் துறையில் பணியாற்றினால், குறைந்தவயதிலேயே என்பிஎஸ் திட்டத்தை தொடங்குவது சிறந்தது. அதாவது 26வயதில் என்பிஎஸ் திட்டத்தில் சேர்ந்து மாதம் ரூ.4ஆயிரம் தொகையை 60வயதுவரை முதலீடு செய்தால், ஓய்வூதியமாக 60வயதுக்குப்பின் மாதம் ரூ.35ஆயிரம் கிடைக்கும். இந்த கணக்கீடு என்பது 11சதவீத வட்டியை கணக்கிட்டு வழங்கப்பட்டது. வட்டிவீத மாறுதலுக்கு ஏற்ப ஓய்வூதியத் தொகையும் மாறுபடும்.

26 வயதில் மாதம் ரூ.4ஆயிரம் முதலீடு செய்தால், 60வயதை அடையும்போது சேமிப்பில், ரூ.16 லட்சத்து 32ஆயிரம் இருக்கும். ஆனால்,ஒட்டுமொத்த தொகை வட்டியோடு சேர்த்து ரூ.ஒரு கோடியே 77 லட்சத்து 84ஆயிரத்து 886 இருக்கும். இந்த மிகப்பெரிய தொகையை நாம் கற்பனைசெய்துகூட பார்க்க முடியாது. மாதம் ரூ.4ஆயிரம் முதலீடு செய்து, அந்தத் தொகையும் ரூ.16.32 லட்சம் மட்டுமே இருக்கிறது. ஆனால், நமக்கு கிடைப்பதோ ஏறக்குறைய ரூ.2 கோடி.

இந்த ஓட்டுமொத்த தொகையில் குறிப்பிட்ட தொகையைஅதாவது ரூ.ஒரு கோடியே 6 லட்சத்து 70ஆயிரத்து 932 திரும்பப் பெறலாம். அதேசமயம் மீதமுள்ள தொகைக்கு வட்டியாக ரூ.35ஆயிரத்து 570 ஓய்வூதியமாக மாதம் தோறும் 61வயது தொடங்கும்போதிருந்து ஓய்வதியமும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் ஓய்வுகாலத்தை சிக்கலின்றி அனுபவிக்க ரூ.ஒருகோடியும் கிடைக்கும்.

மேலும் படிக்க:

சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி இல்லை

ரேஷன் கடைகளில் வருகிறது புதிய நடைமுறை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)