மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக 1.72 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) உத்தரவிட்டுள்ளார்.
மீன்பிடி நிவாரணம்
மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் (Fishers) தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல 2008ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி நடப்பாண்டிற்கு 1.72 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கிடும் பொருட்டு, ரூ.86 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என மீன்வரத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா உச்சத்தில் இச்சமயத்தில், மீனவர்களுக்கு மீன்பிடி நிவாரணம் பேருதவியாக இருக்கும்.
மேலும் படிக்க
கொரோனா ஊரடங்கால் டன் கணக்கில் வீணாகிறது முல்லைப் பூக்கள்!
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு! முதல்வர் அறிவிப்பு!