கொரோனா காலத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.7000 வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)
கடந்த ஆண்டு பரவியக் கொரோனா முதல் அலையில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், நடப்பாண்டு இரண்டாவது அலை மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் வேலையின்றி தவிக்கும் மக்களின் நிலை பெரும் சிக்கலில் தள்ளப்பட்டிருக்கிறது.
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
அரசுக்கு கோரிக்கை (Request to Government)
அதேசமயம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசின் அறிவிப்புகள் போதுமானதாக இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் பாலகிருஷ்ணன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
கொரோனாத் தடுப்பு பணிகள் (Coronation prevention works)
அதில், தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இதிலிருந்து விலக்கு பெற்று தமிழகத்தில் கொரோனாத் தடுப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஒத்துழைப்பு பெற வேண்டும். தமிழகத்தில் அனைத்து வயதினரும் தடுப்பூசிப் போட ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதிகக் கட்டணம் (Higher fees)
ரெம்டிசிவர் மருந்து மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை உறுதி செய்ய வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நடவடிக்கைத் தேவை (Action required)
எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு ஏற்கனவே அரசு அறிவித்தபடி நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
மாதம் ரூ.7,000 (Rs. 7,000 per month)
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.7,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- நாளை முதல் அமல்!
கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்