ஹோலி பண்டிகைக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப் பெரிய அளவில் சலுகை அளிக்க காத்திருக்கிறது. இதன்படி, ஊழியர்களின் சம்பளம் 1000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவத்தினர்
ஹோலி பண்டிகைக்கு முன்பாக, ராணுவத் துறையின் சிவில் ஊழியர்களுக்கான ரிஸ்க் அலோவன்ஸை (Risk allowance)அதிகரிக்க மத்திய மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளது.
ராணுவத் துறையில் பணியாற்றி வரும் பல்வேறு வகையான சிவில் ஊழியர்களுக்கு இந்த சலுகை கிடைப்பது நிச்சயம். பதவிக்கு ஏற்ப சம்பளச் சலுகையும் மாறுபடும். இந்த சிறப்பு சலுகையைக் வருடாந்திர அடிப்படையில் கணக்கிட்டால், ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 8000 ரூபாய் வரையில் உயரும். இந்த பிரிவில் வரும் ஊழியர்களின் அலோவன்ஸின் கீழ், திறமையற்ற பணியாளர்களுக்கு மாதம் 90 ரூபாய் risk allowanceசாக வழங்கப்படும்.
இது தவிர, செமி குஷன் பணியாளர்களுக்கு ரூ.135ம், திறமையான பணியாளர்களுக்கு ரூ.180ம், அரசிதழ் அல்லாத அதிகாரிகளுக்கு ரூ.408ம், கெசட்டட் அதிகாரிகளுக்கு ரூ.675 வீதமும் மாதந்தோறும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். இது எப்போது கிடைக்கும் என்பது குறித்த விபரங்களை அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
மேலும் படிக்க...