News

Saturday, 26 December 2020 01:53 PM , by: KJ Staff

Credit : The Hindu

நடப்பு காரீப் பருவ சந்தைக் காலத்தில் 54.78 லட்சம் விவசாயிகள் ஏற்கெனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக (Minimum support price) ரூ. 84178.81 கோடி பெற்றுள்ளனர்.

நெல் கொள்முதல்:

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்டில் நெல் கொள்முதலில் (Paddy Purchase) நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு டிசம்பர் 24 வரை 445.86 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் 355.87 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் கொள்முதல் 25.28 சதவீதம் அதிகம். இந்த ஆண்டு இது வரையிலான மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 202.77 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாய நிலத்தை சமப்படுத்த வந்துவிட்டது ஒளிக்கற்றை கருவி!

பருப்பு (ம) எண்ணெய் வித்துக்கள் கொள்முதல்:

மாநிலங்களின் வேண்டுகோள் படி தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ,ஆந்திரப்பிரதேசத்திலிருந்து 51.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு (Lentils) மற்றும் எண்ணெய் வித்துக்கள் (Oil) ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 இலட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய், கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அறிமுகமானது, கீழே சாயாத சீரக சம்பாவின் புதிய நெல் வகை!

சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் (Approval) வழங்கப்படும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

அறிமுகமானது, கீழே சாயாத சீரக சம்பாவின் புதிய நெல் வகை!

விவசாய நிலத்தை சமப்படுத்த வந்துவிட்டது ஒளிக்கற்றை கருவி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)