மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமைத் தொகை தரும் பணியை, கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குமாறு, அரசிடம் கேட்கப்பட்டுள்ளது என, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். கூட்டுறவு துறை சார்பில், சட்டசபையில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டுறவு வங்கி (Co-operative society)
அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும், மக்களிடம் இருந்து, 71 ஆயிரத்து, 955 கோடி ரூபாய் வைப்பு தொகை பெறப்பட்டுள்ளது. கடனாக மொத்தம், 64ஆயிரத்து, 140 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. மக்களிடத்தில் வைப்பு தொகை பெறுவதிலும், அவர்களுக்கு நிதி உதவி செய்வதிலும், கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வங்கி துறையில் போட்டிகள் நிறைந்துள்ளன. தனியார், தேசிய வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளிலும், அனைத்து சேவைகளும் கிடைக்கும்வகையில், தகவல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிருக்கு, 1,000 ரூபாய்
மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமை தொகை தரும் பணியை, கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குமாறு, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கு முன் வங்கிகளை நவீனமயமாக்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
விவசாய தொழில் சாராமல் வேறு பிரிவுகளில், 3.18 லட்சம் பேர் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் உள்ளனர். அவர்கள், அபாரத வட்டி இல்லாமல், அசல் மற்றும் வட்டியை மட்டும் செலுத்தினால் போதும். இதனால், 1,300 கோடி நிலுவை கடன் வசூலாகும் என அவர் கூறினார்.
மேலும் படிக்க
பிக்சட் டெபாசிட் செய்ய வங்கிகளை விட தபால் அலுவலகம் தான் பெஸ்ட்: ஏன் தெரியுமா?