News

Wednesday, 23 February 2022 12:59 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் அளித்த வெற்றிக்கு பரிசாக இந்தத் திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிடிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 130-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. முன்னதாகச் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது, திமுக ஆட்சி அமைந்து, சுமார் 9 மாதங்கள் ஆன நிலையில், அந்த திட்டம் இதுவரை அமலுக்கு வரவில்லை. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அதிமுக - பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வந்தன. இதை அடுத்து, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், குடும்பத் தலைவிகளுக்கு எப்போது உரிமைத் தொகை வழங்கப்படும் என்றக் கேள்வி எழுந்தது.

அமோக வெற்றி

இந்நிலையில், எதிர்பார்த்தபடி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் திமுகக் கைப்பற்றியுள்ளது.குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வார்டுகளிலும், திமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும், கொங்கு மண்டலத்தையும் திமுக தன்வசப்படுத்தி உள்ளது. இதனால் திமுக உடன்பிறப்புகள் மகிழ்ச்சியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமோக ஆதரவு அளித்து, வெற்றி பெறச் செய்த மக்களுக்குப் பரிசு வழங்க திமுக அரசுத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை, விரைவில் தொடங்கி வைக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக, கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்காக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்களையும் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

ஏமாற்றம்

முன்னதாக பொங்கல் பரிசு ரொக்கத்தொகை இல்லாததால், ஏமாற்றம் அடைந்த இல்லத்தரசிகளை சமாதானப்படுத்தவும், மகிழ்விக்கவும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் கைகொடுக்கும் எனவும் கருதப்படுகிறது.

மேலும் படிக்க...

அடடா வேர்க்கடலையில் இத்தனைப் பக்க விளைவுகளா?

இதுக்குகூடவாக் கல்யாணம் நிறுத்துவாங்க? அடக் கொடுமையே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)