அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பதிலுரை இன்று நடைபெற்றது. அதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அப்போது கல்லூரி மட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது மாணவிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதாவது அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் மூவலூர் ராமாமிர்த அம்மையார் உயர்கல்வி திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றுக் கூறினார்.
தவறு செய்தவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். டாஸ்மாக் கணினி மயமாக்கப்படும். வணிகவரித்துறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
அனைத்து தரப்பின் கருத்துகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு செயல்படுகிறது. தமிழக அரசு நியமித்த குழு வேறு எந்த நாட்டிலும் இல்லை. தமிழகத்தில் 90 சதவீதம் குடும்பத்திற்கு மேல் மொபைல்போன் வைத்திருக்கிறார்கள். தமிழகம் ஏழை மாநிலம் அல்ல வளர்ந்த மாநிலம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க...
இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!