News

Thursday, 13 January 2022 08:21 AM , by: Elavarse Sivakumar

பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு தாய்குலங்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் (Legislative election)

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவோம் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்

பஞ்சாப் மாநிலத்தில், வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளது. ஒருபுறம் கேப்டன் அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளார்.

பிரச்சாரப் பயணம் (Campaign trip)

இதற்கிடையே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, இந்த மாநிலங்களில் சுறவாளிக் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வாக்குறுதிகளாக வெளியிட்டு வருகிறார்.

ஒருபகுதியாக, செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

சொந்த ஊர் (Home town)

பஞ்சாப் வளர்ச்சி மற்றும் வளம் பெறுவதற்கு 10 அம்ச 'பஞ்சாப் மாடல்' திட்டத்தை நாங்கள் தயாரித்து உள்ளோம். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சி ஏற்படுத்துவதுடன், வேலைத் தேடி கனடாவிற்கு சென்றவர்கள், அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் சொந்த ஊர் திரும்புவார்கள்.

இலவச மின்சாரம் (Free electricity)

போதைக் கூட்டணியை உடைப்பதுடன், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். 15 ஆயிரம் மொகல்லா கிளினிக் அமைப்பதுடன் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிப்போம்.

வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சம்பா நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயி!

கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் பாதிப்பு: பெருங் கவலையில் விவசாயிகள்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)