உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கான நிதியை, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அவற்றுக்கு மாநிலம் முழுதும், 910 கிளைகள் செயல்படுகின்றன.
உதவித் தொகை (Scholarship)
தனியார் வங்கிகளுக்கு இணையாக, இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியில் வங்கி சேவை என, பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் கூட்டுறவு வங்கிகளிலும் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியர் உயர் கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்த, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அந்த நிதியை, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்கள் ஆகியோருடன், கூட்டுறவு துறை உயரதிகாரிகள், நாளை மதியம், 3:30 மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
மேலும் படிக்க