திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தோட்டக்கலை துறையின் சார்பில், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னைக்கு இடையில் ஊடுபயிராக வாழை பயிர் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு மானியமும், இடுபொருட்களும் வழங்கப்படுகிறது. இதை எவ்வாறு பெறலாம் என்று பார்க்கலாம்.
தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள், அபிவிருத்தி திட்டங்கள் வழங்கப்படுகிறது. மேலும் வேளாண் கருவிகளும், உரங்களும், இடு பொருட்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே உள்ள ஒரு சாகுபடிக்குள் மற்றொரு பயிர் சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு இரட்டை லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தில் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது.
அப்படி இருக்ககையில் விவசாயிகள் பலன் பெரும் வகையில் மேலும், மானியத்தையும் இடு பொருட்களையும் வழங்குவதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருப்பம் உள்ள விவசாயிகள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு திட்டப் பயன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
மேலும், இதை எவ்வாறு பெற வேண்டும் என்றால் உடனடியாக மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தும் பயன்பெறலாம் என மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
சூரிய கிரகணம் - அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்த அரசு!