News

Sunday, 10 October 2021 01:08 PM , by: Elavarse Sivakumar

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திமுக அரசின் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர்.கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதி (Election promise)

தமிழக சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்றது. அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபோதிலும், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதி நெருக்கடிக் காரணமாக செயல்படுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம் (Opposition Criticism)

இதற்கிடையில், திமுக தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக , பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. திமுக தேர்தலுக்காகக் கொடுத்த வெற்று வாக்குறுதி இது என்றும் விமர்சித்து வருகின்றன.

அமைச்சர் உறுதி (Minister confirmed)

இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் முறைப்படி அறிவிப்பார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசிய அமைச்சர் நேரு, “அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை சரியான முறையில் நடத்தினார்களா? தற்போது நடைபெற்றதை விட நேர்மையாகத் தேர்தலை நடத்த முடியாது” என்று கூறினார்.

மேலும் படிக்க...

கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!

விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)