இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 November, 2021 2:31 PM IST

பொங்கல் பண்டிகையின்போது, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மழையால் பாதிப்பு (Damage by rain)

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, பெய்தத் தொடர் மழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

பொங்கல் பரிசு (Pongal gift)

எனவே மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டுக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் உதவியை நாடியுள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மக்கள் ஏமாற்றம் (People are disappointed)

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்டதை போல் ரூ.2,000 அல்லது ரூ.2,500 என ரொக்கத் தொகை அறிவிக்கப்படவில்லை.இதனால் தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துக் கொண்டு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ரூ.1000 உதவித்தொகை (Rs.1000 stipend)

இந்நிலையில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே தமிழக அரசு புதிய திட்டங்கள் ஏதேனும் அமல்படுத்தவும் வாய்ப்புள்ளது.

பொங்கல் பொருட்கள் (Pongal products)

இதனிடையே பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

மளிகைப் பொருட்கள் (Groceries)

மேலும், பண்டிகை கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகை பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) வழங்கப்படும். இதன்மூலம் 2,15,48,060 குடும்பங்கள் பயன்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

Freezer Boxல் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்த அதிசயம்!

இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!

English Summary: Rs.1000-Pongal gift scheme for family heads!
Published on: 21 November 2021, 02:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now