2013 - 2018 வரையிலான அதிமுக ஆட்சியில் சி.ஏ.ஜி. அறிக்கை தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது முறைகேடுகள், குளறுபடிகள் காரணமாக ரூ.14000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய மின் உற்பத்தி திட்டங்களின் தாமதங்கள் காரணமாக ரூ.2,381.54 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டதை அடுத்து பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, மின்சாரம் வாங்கியதில் ரூ.2,099.48 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக காண்பிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கொள்முதல் குறித்து பார்த்தோமானால் கடைநிலை மின் உற்பத்தி நிறுவனத்திடம் ரூ.493.74 கோடி ரூபாய் செலவுக்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ.349.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் செயல்படாத நிறுவனங்களிடம் இருந்தும் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூ.712 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிட்டடுள்ளது.
பிறகு வாங்காத மின்சாரத்துக்கு அளவிட்டு குளறுபடி என்ற பெயரில் ரூ.243 கோடி அதிகமான செலவு செய்ததும் தெரிய வந்துள்ளது. அபராத தொகையை வசூலிக்காமல் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்தால் ரூ.116 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓப்புக்கொண்ட அளவிலான மின்சாரத்தை வாங்காததால் ரூ.123 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது சி.ஏ.ஜி. அறிக்கையில் வெளியாகியுள்ளது.
நிர்வாக சீர்கேட்டை அம்பலப்படுத்திய மத்திய கணக்காய்வு தணிக்கை ஆய்வு
மின்கொள்முதல் ஒப்பந்தங்கள் முறையாக பராமரிக்காததால் ரூ.39.84 கோடி செலவு. அபராத தொகையை தவறாக கணக்கிட்டதால் ரூ.52.74 கோடி வசூலிக்க முடியாத நிலை. வெளி மாநிலங்களில் மின்சாரத்தை பெறாமல் உள்ளூரில் கொள்முதல் செய்ததால் ரூ.1,055 கோடி நட்டம். ஒப்பந்தப்படி மின்சாரம் கொள்முதல் செய்யத் தவறினால் 323.64 கோடி அபராதம்.தொடங்காத நிறுவங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதால் ரூ.605.48 கோடி இழப்பு.
நீண்ட கால ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு குறுகிய கால ஒப்பந்தம் செய்ததால் ரூ.93.40 கோடி நட்டம். அதிக விலை மின்சாரம் வாங்கியதால் ரூ.544.44 கோடி நட்டம்.மலிவு விலை மின் உற்பத்தி நிலையங்களிடம் இருந்து முழு ஒதிக்கீட்டை பெறாததால் ரூ.349.67 கோடி இழப்பு. வெப்ப அளவுகள் மற்றும் சுய தேவை மின்சாரத்துக்கு ரூ.355.30 கோடி இழப்பு.
சந்தை விலையில் ரூ.3.39 - ரூ.5.42-க்கு பெற வேண்டிய மின்சாரத்தை ரூ.12-க்கு கொள்முதல்.குறிப்பிட்ட நிறுவனத்திடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் பெற்றதால் ரூ.424.43 கோடி நட்டம். குறுகிய காலக் கொள்முதலாக ரூ.5.50-க்கு வாங்கியதால் ரூ.1687 கோடி இழப்பு. தவிர்த்திருக்க கூடிய திறன், ஊக்கத்தொகை மற்றும் கட்டணங்களாக ரூ.242 கோடி கூடுதல் செலவு.
மாநிலத்திற்குள் உள்ள மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து ரூ.116 கோடிக்கு கொள்னமுதல் செய்யப்பட்டுள்ளது. விட்டு விட்டு மின்சாரம் வழங்கிய காலத்திற்கான திறன் கட்டணம் செயல்படுத்தல்பட்டதால் ரூ.101.31 கோடி இழப்பு.நீடிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்கு ரூ.39.48 கோடி கூடுதல் செலவு.
மாநிலத்திற்கு மின்சராம் வழங்குவோருக்கு கூடுதல் கட்டணம் கொடுத்ததால் ரூ.1,055.84 கோடி அதிக செலவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து மீட்கப்படாத தொகையான ரூ.41.25 கோடி இழப்பு. கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால் 5 ஆண்டுகளில் ரூ.14,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவை அனைத்தும் சி.ஏ.ஜி. அறிக்கையில் வெளியான செய்திகள் ஆகும்.
மேலும் படிக்க:
இனி மின்கட்டணத்திலும் சேமிக்கலாம்! முன்கூட்டியே மின்கட்டணம் கட்டினால் வட்டி வழங்கப்படும்!
இலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு! பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக் ஷா திட்டம்!
3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி