News

Tuesday, 23 November 2021 02:51 PM , by: T. Vigneshwaran

Tomato Price Today

மக்கள் தக்காளியின் விலையை மட்டும் கேட்டுவிட்டு செல்கிறார்கள். நாக்பூரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி நிஷாந்த் மட்டும் இந்த வேதனையில் சிக்கவில்லை. தக்காளி மற்றும் பிற காய்கறிகளின் விலை உயர்வால் அவரது விற்பனை சரிந்துள்ளது.

மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா என, விலை உயர்ந்த காய்கறிகளை மக்கள் வாங்க முடியாமல், பல மாநிலங்களைச் சேர்ந்த விற்பனையாளர்கள் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

மாநிலங்கள் முழுவதும் காய்கறிகளின் விலையைப் பார்த்தால், தக்காளி விலை உயர்ந்து வருவதைக் காட்டுகிறது. சென்னையில் தக்காளி கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடலோர நகரம் மற்ற காய்கறிகளுக்கும் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

ஹைதராபாத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வரும் நிலையில், மக்களுக்கு எந்த ஒரு காய்கறிகளும் கிடைக்கவில்லை. இந்திய தக்காளி இப்போது கிலோ ரூ. 120 ஆக உள்ளது, இது அனைத்தையும் பாதிக்கிறது, என்கிறார்கள் மக்கள்.

போபாலில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.80, வெங்காயம்-ரூ.30/கிலோ, ஓக்ரா-ரூ.80/கிலோ,மற்றும் பட்டாணி- ரூ.100/கிலோ என்ற விலையில் விரிப்பை செய்யப்படுகிறது.

இது குறித்து கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் எஸ்.சந்திரன் கூறுகையில், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, விவசாய நிலங்களில் இருந்து நேரடியாக ரூ.500க்கு கொள்முதல் செய்யப்பட்ட 27 கிலோ தக்காளி ரூ.3,000க்கு விற்கப்படுகிறது. தக்காளியின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு விலை உயர்ந்தது,” என்றார்.

மேலும் படிக்க:

LPG Subsidy: மக்களின் கணக்கில் ரூ.237 சிலிண்டர் மானியம் டெபாசிட்!

Bank Of India: குறைந்த விலையில் வீடுகள் ஏலம்! எப்போது?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)