News

Friday, 01 July 2022 09:38 PM , by: Elavarse Sivakumar

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இது தொடர்பாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் .இ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

23% வரை

கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் 01.01.2020 ந் தேதியில் இருந்த சம்பள உயர்வு குறித்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு அவர்களுக்கான 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் ஊதிய உயர்வினை தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி 01.01.2020 முதல் ஊதிய உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. சங்கங்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப 23% வரை ஊதியம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வினால் பணியாளர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.2,259/-ம், அதிகபட்சமாக ரூ.14815/-ம் ஊதிய உயர்வு கிடைக்கும். இவற்றின் மூலம் வேளாண்மை உற்பதியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் 1675 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.187 குறைந்தது!

7 டன் ரசாயன மாம்பழங்கள் - அதிரடி பறிமுதல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)