மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி விகிதத்தை அதிகரித்து மத்திய ஊரக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு நாள் குறைந்தபட்ச கூலித் தொகை ரூ. 281ல் இருந்து ரூ. 290ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, வெறும் 3% விகிதம் உயர்த்தப்பட்டுளளது.
100 நாள் வேலை
2005-ல் இயற்றப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட சட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய உடலுழைப்பு வேலை சட்டப்படி அளிக்கப்படும். அவ்வாறு, வேலை கொடுக்கத் தவறினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் 30 நாட்கள் சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக வேலைக் கொடுக்கும் வரை அரசு தர வேண்டும்.
இந்த சட்டத்தின் 6(C) பிரிவின் கீழ், 100 நாள் பணியாளர்களுக்கான ஊதிய விகிதத்தை மத்திய அமைச்சகம் அவ்வப்போது நிர்ணயித்து வருகிறது. இந்த நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறைவான ஊதியத்தை வழங்கக் கூடாது.
அந்த வகையில், தற்போது ஊதிய விகிதத்தை மத்திய ஊரக அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. புதிய அறிவிப்பின் படி, தமிழ்நாட்டில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹரியானா, கேரளா, கர்நாடகா, கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த குறைந்தபட்ச ஊதியம் ரூ. 300 க்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
பான் ஆதார் இணைக்க வில்லை என்றால் பேரும் இழப்பு நேரிடலாம்
மேலும், இந்தச் சட்டத்தின் கீழ், 100 நாள் பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையோ, அல்லது வேலை செய்த 14 நாடுகளுக்குள் உட்தியம் வழங்க வேண்டும். ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டால் ஊதியம் வழங்கல் சட்டத்தின் கீழ் நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.
மேலும் படிக்க
கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: விரைவில் UPI வசதி!