தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு, மாத சம்பளம் இந்திய மதிப்பின்படி ரூ.40,000. அவரின் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாகச் அந்த நிறுவனம் செலுத்திய தொகை ரூ. 1.42 கோடி ரூபாய் வந்தது. இதனால் அதிர்ச்சியின் உறைந்த அந்த நபர் செய்த காரியம் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிலி நாட்டைத் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு வழக்கம் போல் வங்கியின் வாயிலாக சம்பள பணத்தை வழங்கியுள்ளது.
சில நேரங்களில் ஒரு மாத சம்பளத்துக்கு 2 மாத சம்பளம் 3 மாத சம்பளம் எனத் தவறுதலாகச் நிறுவனம் செலுத்திவிடும். ஊழியர்களும் விவரம் தெரிந்ததும், அல்லது நிறுவனம் விளக்கம் அளித்து கேட்கும் போது அதை நிறுவனத்திடம் மீண்டும் ஒப்படைத்துவிடுவார்கள்.இது நடப்பது வழக்கம்தான். இருப்பினும் தற்போது நடந்த மிகப்பெரிய தப்பு ஊழியரை மாற்றி யோசிக்க வைத்துள்ளது.
ரூ1.42 கோடி
அதாவது ஊழியர் ஒருவருக்கு 286 மாத சம்பளத்தை தவறுதலாக ஒரே தவணையாக செலுத்தியுள்ளது வங்கி. அந்த ஊழியருக்கு மாத சம்பளம் இந்திய மதிப்பின்படி ரூ.40,000. அவரின் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாகச் அந்த நிறுவனம் செலுத்திய தொகை ரூ. 1.42 கோடி ரூபாய்.
காத்திருந்த நிறுவனம்
நடந்த தவறை உணர்ந்த அந்நிறுவனம், உடனே அந்த ஊழியரைத் தொடர்புகொண்டு கூறியுள்ளது. உடனே அந்த ஊழியரும் இதோ வங்கி சென்று பணத்தைத் திரும்ப அனுப்பி விடுகிறேன் எனக் கூறியுள்ளார். நிறுவனமும் பணம் வந்துவிடும் என்று காத்திருந்தது.
தலைமறைவான ஊழியர்
ஆனால், வங்கிக்கு பணம் வந்து சேரவில்லை. ஆனால், கடந்த ஜூன் 2-ம் தேதி தான் வேலை ராஜினாமா செய்வதாகக் கூறிவிட்டு, நிறுவனம் தவறுதலாகக் கொடுத்த சம்பளத்தை எடுத்துக்கொண்டு ஊழியர் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் அந்நிறுவனம் வழக்கு பதிவு செய்துவிட்டு, போலீஸ் மூலம் ஊழியரைத் தேடி வருகிறது.
பணம் பத்தும் செய்யும் என்பார்கள். ஆனால், இப்போது ராஜினாமாவும் செய்யும் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க...