News

Thursday, 29 September 2022 11:17 AM , by: Elavarse Sivakumar
ரேஷன் கடைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தள்ளு வண்டியில் வியாபாரம் செய்பவர்கள், வெளி மாநில தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் 2 கிலோ மற்றும் 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் விற்பனைதொடங்கப்பட இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பயிர்கடன்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, “கூட்டுறவு சங்கங்களில் முதல் மூறையாக ரூ.10,000 கோடியை தாண்டி 2021-22ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

வட்டியில்லாக் கடன்

கூட்டுறவு துறையில் முதல் முறையாக ஆடு, மாடு, கோழி மற்றும் மீன்வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது வரை 1,25,964 விவசாயிகளுக்கு ரூ.589.08 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விற்பனை

நியாய விலைக் கடைகளில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில தொழிலாளர்கள் ஆகியோர் நலனைக் கருத்தில் கொண்டு 5 கிலோ மற்றும் 2 கிலோ கேஸ் சிலிண்டர்கள் விற்பனை துவக்கப்பட உள்ளது. தமிழ்நாடு மநில தலைமை கூட்டுறவு வங்கியிலும், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் மைய வங்கியியல் தீர்வு முறை நடைமுறையில் உள்ளது. இந்த வங்கிகளில் மொபைல் பேங்கிங், RTGS, NEFT வசதிகள் நடைமுறையில் உள்ளன.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் இன்று முதல் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் கூகுள்பே, பேடிஎம் போன்ற பரிவர்த்தனை வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் இந்த UPI வசதி அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)