திருச்செந்தூர் வட்டாரப் பகுதிகளில் வாழும் விவசாயிகள் நோய் எதிர்ப்புச் சக்தி வாய்ந்த நெல் விதைகளை மானிய விலையில் (Subsidy price) வாங்கிச் சென்று பயன்பெறுமாறு வேளாண் துறை (Agriculture Department) தெரிவித்துள்ளது.
மானிய விலையில் விதைகள்
திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெங்கட சுப்பிரமணியம் இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், விவசாயிகள் பிசானப் பருவத்துக்கு விரும்பி பயிரிடக் கூடிய நோய் எதிர்ப்புச் சக்தி வாய்ந்த நெல் விதைகளான டி.பி.எஸ். 5, பி.பி.டி. 5204 (கர்நாடகா பொன்னி), ஏ.எஸ்.டி. 16 (வெள்ளை சம்பா) முதலிய உயர் ரகங்கள் அதிக அளவில் திருச்செந்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விற்பனைக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளது.
விதைகளின் தன்மை
விவசாயிகள் அதிக அளவில் விரும்பிப் பயிரிடக்கூடிய ரகம் கர்நாடகா பொன்னி. இது, 135 நாட்கள் முதல் 145 நாட்கள் வயதுடையது. டி.பி.எஸ் 5 ரகம் 115 நாட்கள் முதல் 118 நாட்கள் வயதுடையது. மேலும் சாராசரியாக 6300 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. அம்பை 16 ரகம் 110 நாட்கள் வயதுடையது.
விதைகள் கிடைக்கும் இடம்:
இவ்விதைகள் நெல் விதை கிராமத் திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நெல் விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணுடன் (Aadhar Card) திருச்செந்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி வாங்கி பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!
Amazon pay-யில் LPG சிலிண்டர் புக் செய்தால் ரூ.50 தள்ளுபடி! ஆக.31வரை மட்டுமே!!